நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படம் ரூ.200 கோடி வசூல்? உண்மை நிலவரம் என்ன?

0
நடிகர் ரஜினியின்
நடிகர் ரஜினியின் "அண்ணாத்த" திரைப்படம் ரூ.200 கோடி வசூல்? உண்மை நிலவரம் என்ன?
நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படம் ரூ.200 கோடி வசூல்? உண்மை நிலவரம் என்ன?

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளி நாளன்று வெளியான நிலையில் அந்த படம் ரூ.200 கோடி வசூல் பெற்றதாக செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் அது தவறான செய்தி என உண்மை நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த படம்:

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளியான அண்ணாத்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த படம் வேகமாக ரூ. 200 கோடி வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது என செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை, காரணம் மழை தான். கடந்த சனிக்கிழமை முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யாவிற்காக ஆட்டோ ஓட்டும் கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

குறிப்பாக சென்னை, கடலூர், கன்னியாகுமாரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவாட்டங்கள் கனமழை பெய்தது. அதிலும் அதிக தியேட்டர்களை கொண்ட சென்னை மாநகரில் மழை பெய்து சாலைகள் முடங்கி உள்ளது. அதனால் மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. பல ஊர்களில் காட்சியையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. எனவே, வசூல் அதிகமாக இருக்கும் என நினைத்த இப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ், தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ஆனால், ட்ரேக்கர்ஸ் என்கிற பெயரில் அண்ணாத்த படம் ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டது என பொய்யாக செய்திகளை பரப்பி வருகின்றனர். உண்மை நிலவரம் என்னவென்றால் இப்படம் ரூ.100 கோடியை கூட இன்னும் வசூல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று தான் படம் நல்ல வசூலை சந்தித்து அதன் பின் சென்னை போன்ற பெருநகரங்களை தவிர மற்ற ஊர்களில் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட் விற்பதே போராட்டமாக இருந்துள்ளது.முதல்நாள் தமிழகத்தில் மட்டும் ரூ.11 கோடி வசூலானது. அடுத்த நாள் 25 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. ஆனால், சனிக்கிழமை மழை துவங்கியதும் வசூல் குறைய துவங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!