இந்திய தபால் அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.20,000 வரை சம்பளம்!

0
இந்திய தபால் அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ.20,000 வரை சம்பளம்!
இந்திய தபால் அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ.20,000 வரை சம்பளம்!
இந்திய தபால் அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.20,000 வரை சம்பளம்!

இந்திய தபால் அலுவலகங்களில் காலியாக இருக்கும் கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தற்போது ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களில் காலியாக இருக்கும் இடத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘இந்திய தபால் அலுவலகங்களில் பணியாளர் கார் ஓட்டுநர் தரத்தில் இருக்கும் 17 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

இந்த பணிக்கு தகுதி பெறுபவர்களுக்கு பே மேட்ரிக்ஸில் 7வது CPCன் படி மாதம் ரூ. 19900 ஊதியமாக கிடைக்கும். இப்போது விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை முதுநிலை மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, வொர்லி, மும்பை-400018 என்ற அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஜூன் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி:

  • இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
  • வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்குவதற்கான மோட்டார் பொறிமுறையின் அறிவு அவசியம்.
Exams Daily Mobile App Download
  • குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் டிரைவிங் லைட் மற்றும் கனரக மோட்டார் வாகன அனுபவம் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

7வது CPCன் படி பே மேட்ரிக்ஸில் நிலை 2 படி மாதம் ரூ. 19,900 ஊதியமாக அளிக்கப்படும்.

வயது வரம்புகள்:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை முதுநிலை மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, 134-A, அஹிரே மார்க், வோர்லி, மும்பை-400018 என்ற முகவரிக்கு ஜூன் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!