தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் விவசாயங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பெரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரூ.20,000 நிவாரணம்:

இந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள், குடிநீர் வடிகால் ஆகியவை சேதமடைந்துள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

சென்னைக்கு நவ.18 ரெட் அலெர்ட், இம்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

மேலும் வெள்ளப் பெருக்கால் பல்வேறு விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக அறுவடைக்கு இருந்த விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதால் விவாசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – பண பரிவர்த்தனைகளின் வரம்பு!

அதன்படி அறுவடைக்கு தயாராக இருந்த முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மேலும் தற்போது நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!