மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!

ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அரசு ஊழியர்களுக்கு 15 – 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கு இரண்டு கட்டமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 31% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு மேலும் அகவிலைப்படி உயர்ந்ததும் மேலும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஹிமாச்சல் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு மருத்துவர்கள் கவனத்திற்கு – பயணத்திற்கு இனோவா கார்! உத்தரவு பிறப்பிப்பு!

அதன்படி அரசு ஊழியர்களுக்கு 15 – 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தன் மூலம் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கான இந்த சம்பள உயர்வு 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை அதிகரிக்கும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!