மதுபான விலை 20% குறைப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
மதுபான விலை 20% குறைப்பு - மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
மதுபான விலை 20% குறைப்பு - மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
மதுபான விலை 20% குறைப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மதுபான விலையை அதிரடியாக குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மதுப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மதுபான விலை குறைப்பு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. அந்த வகையில் அனைத்து மதுபான கூடங்களும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் மதுபான விற்பனை உட்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மதுபான வகைகளின் விலை 50% வரை உயர்த்தப்பட்டது. இது மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

அதாவது தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துவது போல ஆந்திரா மாநிலத்தில் ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்பொரேஷன் லிமிடெட் (APSBCL)எ ன்னும் நிறுவனம் மூலம் அம்மாநிலத்தில் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் மதுபான விலையை அதிரடியாக உயர்த்தியது. அதனால் விலைகுறைவாக விற்பனை செய்யப்படும் மதுபான கடைகளை ஆந்திர மாநில மதுபிரியர்கள் நாடினர். அந்த வகையில் ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த மதுபான கடைகளில் ஆந்திர மாநில மதுபிரியர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?

அதாவது திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபானங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இத்தகைய நிகழ்வால் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் வருமானம் அதிகரிக்க தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில அரசு அதிரடியாக மதுபான வகைகளின் விலையை 20% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மதுப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இனிமேல் ஆந்திராவில் மது விற்பனை அதிகரிக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here