மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் 20% சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் 20% சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் 20% சம்பள உயர்வு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் 20% சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்களுக்கும் ஏப்ரல் மாதம் முதல் 20% சம்பள உயர்வை செயல்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு, ஏப்ரல் 1 முதல் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கவுரவ ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வை அமல்படுத்துவதாக பட்ஜெட் உரையின் போது தெரிவித்துள்ளது. இந்த உயர்வால் மாநிலம் முழுவதும் உள்ள ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், மதிய உணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், கிராம வேலை வாய்ப்பு உதவியாளர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், ஆசிரியர் பணியாளர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் REXCO தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இப்போது ராஜஸ்தானின் சிவில் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தல் விதிகள், ஜனவரி 11, 2022 கீழ் சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டதாக கூறிய முதல்வர் கெஹ்லாட், ஒவ்வொரு ஆண்டும் இதே போல ஊதிய உயர்வை அமல்படுத்த எந்த விதியும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பணியாளர்களுக்கு பதவி உயர்வுகளில் நியாயமான வாய்ப்புகளை வழங்குவதற்காக, தேவைப்பட்டால் பதவி உயர்வு, பதவிகள் அதிகரிப்பு மற்றும் பல்வேறு சேவைகள் அல்லது பணியாளர்களை மறுசீரமைப்பதாகவும் அவர் அறிவித்தார்.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதில் ராஜஸ்தான் கால்நடை வளர்ப்பு துணை சேவை, ராஜஸ்தான் துணை அலுவலகம் மற்றும் மந்திரி சேவை, ராஜஸ்தான் விவசாய துணை சேவை, ராஜஸ்தான் பொறியியல் துணை சேவை, ராஜஸ்தான் ஆயுதப்படை காவலர் (RAC) மற்றும் போலீஸ் வயர்லெஸ் சேவை போன்ற பல சேவைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்ப்புற அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கௌரவ ஊதியம் அல்லது அலவன்ஸ்களில் 20% அதிகரிப்பை அறிவித்து முதல்வர் பட்ஜெட் உரையில் தகவல் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!