20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – கமிஷனர் அறிவிப்பு!

0
20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு - கமிஷனர் அறிவிப்பு!
20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு - கமிஷனர் அறிவிப்பு!
20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – கமிஷனர் அறிவிப்பு!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கான சேவைகளில் ஓயாது பணியாற்றி வரும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளித்து மதுரை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் 20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்பட உள்ளது.

காவலர்களுக்கு விடுப்பு:

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோர், கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த உயிர்கொல்லி நோய் தொற்றுக்கு மத்தியில், இரவு பகல் பாராது தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!

இந்த நிலையில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் சுழற்சி அடிப்படையில் விடுமுறை வழங்குவதாக மதுரை காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார். அந்த வகையில் கொரோனா காலத்தில் இடைவிடாமல் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த காவல் துறை பணியாளர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில், 20% காவலர்கள் வீதம் சுழற்சி முறையில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல்துறை அதிகாரி பிரபு கூறுகையில், ‘கொரோனா காலம் உட்பட மற்ற அனைத்து காலங்களிலும் ஓய்வில்லாமல் வேலை செய்து வரும் எங்களை போன்ற காவலர்களுக்கு இந்த விடுப்பு மன நிம்மதியை அளிக்கிறது. மேலும் காவல்துறையில் உள்ள காவலர்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அவர்கள் பகுதி நேரமாக பணிக்கு வரும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக 10% காவலர்கள் சுழற்சி முறையில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று நடைமுறையில் இருந்த முறையானது, தற்போது 20% மாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விடுமுறை காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை காவலர்கள் வரையுள்ள அனைவர்க்கும் பொதுவான ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலர்கள் தங்கள் உடல் மற்றும் மன நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here