Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் - அருமையான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் - அருமையான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் பெறும் வகையிலும் சேமிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இதில் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பெரும்பாலானோர் சேமிக்க தொடங்கினர். அத்துடன் அஞ்சல் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

தமிழகத்தில் மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி பள்ளிகள் திறப்பு! அரசு அறிவிப்பு!

அதனால் பொதுமக்கள் மத்தியில் இந்த சேமிப்பு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்குபவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் அவர்களின் பெற்றோர் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

இந்த திட்டத்தில் 25 வயதுடைய நபர் தினமும் 150 ரூபாய் முதலீடு செய்வதால் 3500 ரூபாய் மாதந்தோறும் செலுத்த வேண்டும். அத்துடன் ஆண்டுக்கு 54000 வரை செலுத்து வேண்டும். அத்துடன் முதிர்வு காலத்தின் முடிவில் 10.80 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். அதன்படி 20 ஆண்டுகால முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு 20 லட்ச ரூபாய் வரை பெற முடியும். அதனால் இந்த திட்டம் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் சேமிப்புதாரர் முதிர்வு காலம் முடியும் முன் இறந்து விட்டால் இந்த திட்டத்தில் கிடைக்கும் முதிர்வு தொகை அவரின் மனைவிக்கோ அல்லது வாரிசுதாரர்களுக்குகோ வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here