நடிகர் சோனு சூட் மீது 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் – வருமான வரித்துறை அறிக்கை!

0
நடிகர் சோனு சூட் மீது 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் - வருமான வரித்துறை அறிக்கை!
நடிகர் சோனு சூட் மீது 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் - வருமான வரித்துறை அறிக்கை!
நடிகர் சோனு சூட் மீது 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகார் – வருமான வரித்துறை அறிக்கை!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் பல்வேறு சேவைகளை செய்து புகழ் பெற்ற நடிகர் சோனு சூட் ₹ 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் சோனு சூட்:

தமிழில் ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகளவில் நலத்திட்ட உதவிகளை செய்தார். இந்த நிலையில் மும்பை உள்பட சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடிகர் சோனு சூட் ₹ 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அதில், வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டில் சோதனை செய்த போது வரி ஏய்ப்பு குற்ற சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நடிகரால் பின்பற்றப்படும் முக்கிய செயல் முறை, கணக்கில் வராத தனது வருமானத்தை பலரிடமிருந்து போலி பாதுகாப்பற்ற கடன்களாக மாற்றியது. போலியான நிறுவனங்கள் ஆகியவை உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

IPL திருவிழா 2021: சுழன்றடிக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் சூறாவளிகள்!!

இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் இதுபோன்ற 20 முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு நோக்கத்திற்காக கணக்கு புத்தகங்களில் கடன்களாக மறைக்கப்பட்டுள்ளன. இந்த போலி கடன்கள் முதலீடு செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த வரி ஏய்ப்பு, ரூ.20 கோடிக்கு மேல் இன்னும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பெரும் பாராட்டு பெற்ற நடிகர் இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் 91.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள ரூ.17 கோடி இலாப நோக்கமற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!