2 வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தாய் சிறையில் அடைப்பு – பரபரப்பு சம்பவம்!

0
2 வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தாய் சிறையில் அடைப்பு - பரபரப்பு சம்பவம்!
2 வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தாய் சிறையில் அடைப்பு - பரபரப்பு சம்பவம்!
2 வயது குழந்தையை அடித்து சித்ரவதை செய்த தாய் சிறையில் அடைப்பு – பரபரப்பு சம்பவம்!

தமிழகத்தில் வசித்து வந்த ஆந்திராவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துன்புறுத்தல் வழக்கு

தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தையை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேயுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மனலப்பாடி பகுதியில் உள்ள மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37). இவருக்கும் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த துளசி (வயது 22) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு கோகுல் என்ற 4 வயது மகனும், பிரதீப் என்ற 2 வயது குழந்தையும் பிறந்துள்ளனர்.

தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய 90 நாடுகள் – கூட்டறிக்கை வெளியீடு! ஆப்கனில் பதற்றம்!

சமீப காலமாக இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் வடிவழகனை பிரிந்த, துளசி தனது 2 ஆவது மகனை எடுத்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 29) துளசி தன்னிடம் இருந்த குழந்தையை முடியை இழுத்து பிடித்தும், கால்களை மடக்கியும் சித்திரவதை செய்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து தனது குழந்தையை துளசி கொடுமை செய்வதாக கூறி கணவர் வடிவழகன் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்துக்கு சென்று துளசியை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த குழந்தை துளசிக்கு ஏற்பட்ட தகாத உறவின் மூலம் பிறந்தது என்றும், அது தனது கணவரின் ஜாடையில் இருந்ததால் அதனை துன்புறுத்தியதாகவும் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த பெண்ணை 15 நாட்களுக்கு சிறையில் அடைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!