மத்திய ஜவுளித் துறையில் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

0
மத்திய ஜவுளித் துறையில் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மத்திய ஜவுளித் துறையில் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மத்திய ஜவுளித் துறையில் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

ஜவுளித் துறையில் மட்டுமே மத்திய அரசு சுமார் 19 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய ஜவுளித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு:

இந்தியாவில் ஜவுளித்துறை தான் மிகப்பெரிய முக்கியமான பங்கை வகித்து வருகிறது. உள்நாட்டில் போதுமான பருத்தி இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்தும் பருத்தி இறக்குமதி செய்யப்படுகிறது. அரசிற்கும் ஜவுளித் துறையின் மூலமாகத்தான் நிறைய வசூல் கிடைக்கிறது. இதனால் மத்திய அரசு ஜவுளித் துறையில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது.

பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறைகள்!

இதனால் மத்திய அரசு ஜவுளித் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிளார்க் இந்தியா, அர்விந்த் லிமிட்டெட் போன்ற பல நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 67 க்கும் மேற்பட்ட பரிந்துரை கடிதங்கள் பெறப்பட்டன. தற்போது மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித் துறையில் சுமார் 19 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்ய இருப்பதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பரிந்துரைகளின்படி மத்திய அரசு கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிளார்க் இந்தியா, அர்விந்த் லிமிட்டெட் போன்ற குறிப்பிட்ட அறுபத்தி ஒரு நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DR) தவணைத்தொகை – 7வது ஊதியக்குழு முக்கிய தகவல்!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதுபோன்ற ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்து முதலீட்டு தொகை குறைந்தது 19 ஆயிரத்து 707 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கிட்டத்தட்ட 19,000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதால் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வர்த்தகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய ஜவுளித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here