
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் கேப்டனுக்கு 2 வீரர்கள் பரிந்துரை – திலிப் வெங்சர்க்கார் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியதை தொடர்ந்து தற்போது அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் இரு வீரர்களை பரிந்துரைத்துள்ளார்.
திலிப் வெங்சர்க்கார் கருத்து:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான உலக கோப்பை டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து மீண்டும் தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவியிலிருந்து விராட் கோஹ்லி விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!
விராட் கோஹ்லி விலகியதை அடுத்து தற்போது அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டு முடிவெடுக்க உள்ளது. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டனுக்கான பட்டியலில் பல வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் இந்திய மற்றும் T20 கேப்டன் ரோஹித் சர்மாவும், தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினையும் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக காவல் துறையில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு – தேர்வுக்கு தயாராக அதிகாரிகள் அறிவுரை!
ரோஹித் சர்மா கேப்டனாக தனது திறமையை நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் நிரூபித்தார். இதனால் அவர் கேப்டனாக வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள அஸ்வினுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் ரிஷப் பண்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த இந்திய அணி டெஸ்ட் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.