தமிழகத்தில் 2 அரசு பள்ளிகள் மூடல் – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் – அக்.12 பணிகள் தொடக்கம்!
அவ்வாறு நோய்த்தொற்று கண்டறியப்படும் மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது திருப்பூர் மாவட்ட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் வீரபாண்டி மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் வகுப்பெடுத்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2022ல் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 8.6% ஆக அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை தகவல்!
இதில் 4 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் வரும் புதன்கிழமை வரையில் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார். செப்.1ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் 46 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.