தமிழ் மொழி திறனறிவு தேர்வில் 2.50 லட்சம் பேர் தேர்ச்சி- மாதம் ரூ.1,500 ஊக்கதொகை!
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு ஊக்கதொகை அளிப்பதற்காக நடத்திய தமிழ் மொழி இலக்கியதிறனறிவு தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திறனறிவு தேர்வு:
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 11ம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறிவு தேர்வை நடத்தியது.
தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் – இனி ‘இதை’ செய்ய முடியாது!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதில், 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு ஆகிய 2 வருடங்களுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கதொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், இன்று தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், குறிப்பாக, தேர்வில் மாணவிகள் அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.