இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 புள்ளிகள் காலி – இதுதான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!

0
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 புள்ளிகள் காலி - இதுதான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 புள்ளிகள் காலி - இதுதான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 புள்ளிகள் காலி – இதுதான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம் மழையின் காரணமாக ட்ரா ஆனது. இந்நிலையில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ஐசிசி அபராத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புள்ளிகள் அபராதம்:

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் மேட்ச் கடைசி ஆட்டம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது இந்திய அணி. ஆனால் மேட்ச் டிரா ஆனதால் ஆட்ட புள்ளிகளை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர். ஆனால் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இரு அணிகளும் பெற்ற புள்ளிகள் 4 லில் 2ஐ ஐசிசி நீக்கி உள்ளது.

நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு தளர்வுகள் – திரிபுரா அரசு உத்தரவு!

இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தலா 2 புள்ளிகளுடன் நாளை களமிறங்குகின்றன. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட ஓவர்கள் பந்துகளை வீச வேண்டியது அவசியமாகும். இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச வேண்டிய ஓவர்களை விட குறைவான ஓவர்கள் வீசி இருந்ததன் காரணமாக இரு அணி வீரர்களுக்கும் ஆட்ட ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது வீரர்களை பெரிதும் பாதிக்காது.

TN Job “FB  Group” Join Now

மேட்ச் டிரா ஆனதால் வெறும் 4 புள்ளிகளை மட்டும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கொண்டிருந்தது. அதிலும் தலா 2 புள்ளிகள் பறிபோனதால் கடைசி கட்டத்தில் ஏதும் சிக்கல்கள் ஏற்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த முறை இந்தியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அதிக நேரம் பந்துவீச எடுத்துக் கொண்டதால் 4 புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதைப்போல இந்த முறையும் ஏற்பட்டுவிடுமோ என ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!