TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் உற்சாகம்!

0
TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் உற்சாகம்!
TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் உற்சாகம்!
TNPSC 193 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் TNPSC தேர்வு வாரியத்தால் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 193 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

193 காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறையில் கணினி தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – அரசு அதிரடி அறிவிப்பு!

அதாவது மேற்குறிப்பிட்ட பதவிகளில் காலியாக உள்ள 193 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி TNPSC தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த துணை புள்ளியியல் சேவைகள் (Combined Statistical Subordinate Service) தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ஜன.9ம் தேதி தேர்வு நடைபெறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து TNPSC தேர்வு வாரியத்தால் ஒருங்கிணைந்த துணை புள்ளியியல் சேவைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

TNPSC Coaching Center Join Now

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜன.9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த அந்த தேர்வு ஜன.11ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும், தேர்வர்கள் அதே நுழைவுச்சீட்டை வைத்து தேர்வு எழுதலாம் என்றும் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 முக்கிய நகரங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒரு தேர்வும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு தேர்வும் நடைபெறுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here