2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்கள் – பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா!

0
2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்கள் - பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா!
2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்கள் - பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா!
2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்கள் – பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா!

பாரா ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் இந்திய வீரர்கள் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி மொத்தம் 19 பதக்கங்களை வென்று 24வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இது 2021ம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக உள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் தொடர்:

1968 ஆம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா முதன்முதலில் பங்கேற்று போட்டியிட்டது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 1968 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்தியா 12 பதக்கங்களை மற்றும் வென்றிருந்தது. இந்த ஆண்டு தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். இந்த பதக்கப் பட்டியலில் 24வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்திய மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தமிழகத்தில் TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள்!

இந்த ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 162 நாடுகள் போட்டியிட்டனர். இந்தியாவில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்று 9 விதமான விளையாட்டுகளில் விளையாடினர். இத்தொடரில் இந்தியாவிலிருந்து அதிக வீரர்கள் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து 19 வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றனர்.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

அவனி லெகாரா, சுமித் ஆன்டில், மனிஷ் நார்வால், பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். பவினாபென் படேல், சிங்ராஜ் அடானா, யோகேஷ் கத்துனியா, நிஷாத் குமார், மாரியப்பன் தங்கவேலு, பிரவீன் குமார், தேவேந்திர ஜஜாரியா, யாதிராஜ் ஆகியோர் வெள்ளி பதக்கமும் அவனி லெகாரா, ஹர்விந்தர் சிங், சரத் குமார், சுந்தர் சிங் குர்ஜார், மனோஜ் சர்கார், சிங்ராஜ் அடானா ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் 5 பதக்கமும், உயரம் தாண்டுதலில் 4 பதக்கமும், பேட்மிண்டனில் 4 பதக்கமும் பெற்று அசத்தினர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!