வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி? நிதியமைச்சகத்தின் விளக்கம்!

0
வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி? நிதியமைச்சகத்தின் விளக்கம்!
வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி? நிதியமைச்சகத்தின் விளக்கம்!
வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி? நிதியமைச்சகத்தின் விளக்கம்!

மத்திய அரசு அறிமுகம் செய்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஜிஎஸ்டி:

மத்திய அரசு “ஒரே நாடு, ஒரே வரி” என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் அனைத்து இடங்களிலும் ஒரே வரி வசூல் முறை வசூலிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 47 வது கவுன்சில் கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் குறிப்பாக வீட்டு வாடகைக்கு 18% வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 18% சதவீத ஜிஎஸ்டி வரியை வீட்டு வாடகைக்கு வரி வசூலிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டு வாடகைக்கு வசூலிக்கப்படும் 18% வரி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பாக வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடும் இடங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுக்கும் போதும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இதில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.42 லட்சம் பேர் பயணம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதாவது, ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்கள், ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ் வரி செலுத்த வேண்டும். மேலும் வீட்டின் உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை. வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு நிதியமைச்சகம் கூறியதாவது, வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது அத்துடன் தனி நபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வீட்டுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை. ஆனால் பணியாளர் குடியிருப்புக்காக கார்ப்ரேட் நிறுவனங்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!