மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை? உண்மை நிலவரம் என்ன?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை? உண்மை நிலவரம் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை? உண்மை நிலவரம் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை? உண்மை நிலவரம் என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்வானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் போதிலும், 18 மாத நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

DA நிலுவைத்தொகை:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்புகள் அடிக்கடி வருகின்றன. ஆனால், அவை குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டில் முடக்கப்பட்ட அகவிலைப்படி கடந்த ஆண்டே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிலுவைத்தொகை ஏதும் வழங்கப்படவில்லை. கோவிட்-19 தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படி, வழங்கப்படாது. இந்த 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

ஆனால் இவை அனைத்தும் தவறான செய்தியாகும். ஏனெனில், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை பிடித்தம் செய்யப்பட்ட 18 மாத DA நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துள்ளது. தற்போது நிலுவைத் தொகை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலை நிவாரணப் பாக்கியை உடனடி நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்க ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை சுமார் ரூ.34,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், முந்தைய டிஏ மற்றும் டிஆர் நிலுவைகள் விடுவிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். ஜூலை 1, 2021 முதல் DA மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி ஜூலை 1 முதல் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு முன், 17 சதவீதம் சம்பளம் பெற்று வந்தனர். அதே நேரத்தில், அக்டோபர் 2021 இல், இது 3 சதவீதமாகவும் 31 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், மார்ச் 2022 இல், அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here