தமிழகத்தில் செப்.17 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 100 + முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

0
தமிழகத்தில் செப்.17 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 100 + முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் செப்.17 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 100 + முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் செப்.17 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 100 + முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மற்ற மாவட்டத்தினரை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாகவும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வகுப்புகள்? CEO எச்சரிக்கை!

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் மாற்று திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ‘we are your voice’ என்ற தொண்டு நிறுவனம் சார்பாக மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லுாரியில் இந்த முகாமானது நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுடையவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், திருநம்பிகள், ‘www.weareyourvoice.org’ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ள முகாமில் மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது மற்ற மாவட்டத்தினரும் பங்கேற்கலாம் என்றும் கூடுதல் விவரங்களுக்கு 75575 50999, 97007 99993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் தலைமையில் சென்னை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!