தமிழக மக்களுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு – இனி பயணம் ரொம்ப ஈஸி.. அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிதாக 1,666 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள்:
தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில் மக்களுக்கு சிறப்பான பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அண்மையில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திடமிருந்து சுமார் 1,750 பேருந்துகளுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்தது.
திருவண்ணாமலையில் 2500 பக்தர்கள் மட்டுமே அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் விரைவில் 1,666 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் உள்ள 1000 பழைய பேருந்துகளை சுமார் 152.50 கோடி மதிப்பில் புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.