மத்திய அரசுப் பள்ளிகளில் 1,616 காலியிடங்கள் – ரூ.2,09,200 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

0
மத்திய அரசுப் பள்ளிகளில் 1,616 காலியிடங்கள் - ரூ.2,09,200 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!
மத்திய அரசுப் பள்ளிகளில் 1,616 காலியிடங்கள் - ரூ.2,09,200 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!
மத்திய அரசுப் பள்ளிகளில் 1,616 காலியிடங்கள் – ரூ.2,09,200 வரை சம்பளம்! ஜூலை 22 கடைசி நாள்!

மத்திய அரசுப் பள்ளிகளில் முதல்வர், முதுநிலை, இடைநிலை என மொத்தமாக 1,616 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி(Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த பள்ளியில் மொத்தமாக 1,616 காலிப் பணியிடங்கள் உள்ளன. இத்துடன், இந்த பள்ளியில் குரூப் ஏ பிரிவில் பணிபுரிவதற்கு முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் என மொத்தமாக 1616 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Exams Daily Mobile App Download

அதில் முதல்வர் பதவிக்கு 12 காலியிடமும் 50 வயதிற்கு உள்ளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 397 காலிப் பணியிடமும் 40 வயதுக்குள்ளும், இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 683 காலிப் பணியிடமும் 35 வயதுக்குள்ளும், மூன்றாவது மொழி ஆசிரியர் பதவிக்கு 343 காலிப்பணியிடமும், இதரவகை ஆசிரியர்களுக்கு 181 காலிப்பணியிடமும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் மேற்படிப்பை முடித்து பிஎட் படித்து பணி அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா? அரசு ஊழியர்கள் வேண்டுகோள்!

மேலும், முதுநிலை ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் பிஎட் படிப்பும், பிற ஆசிரியர்கள் பதவிக்கு இளங்கலை படிப்புடன் பிஎட் படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல்வர் பதவிக்கு தேர்வாகும் திறமையாளர்களுக்கு ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.47,600 முதல் ரூ.1, 51,100, இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு ரூ.44, 900 முதல் ரூ.1,42,400 வரையும் மாத சம்பளமாக வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள் www.navodaya.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஜூலை 22 ஆம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here