ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – RBI பட்டியல் வெளியீடு!

0
ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - RBI பட்டியல் வெளியீடு!
ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - RBI பட்டியல் வெளியீடு!
ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – RBI பட்டியல் வெளியீடு!

2022 ஆம் ஆண்டின் வங்கிகளுக்கான வருடாந்திர விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. RBI அறிவிப்பின் படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

RBI அறிவிப்பு:

இந்திய ரிசர்வ் வங்கி வருடந்தோறும் தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கான வருடாந்திர விடுமுறை பட்டியலை வெளியிடும். அதேபோல் அடுத்த ஆண்டிற்குரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் பொது பண்டிகை & அரசு விடுமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. மேலும் கூடுதலாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுவதால் மொத்தமாக வங்கிகளுக்கு வார இறுதி விடுமுறை 7 நாட்களாக உள்ளது . RBI வெளியிட்டுள்ள பட்டியலில் மொத்தம் 9 நாட்கள் உடன் சேர்த்து இந்த வார இறுதி விடுமுறைகளையும் சேர்த்து 7 நாட்களுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை வருகிற ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு முதல் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி 3 மற்றும் 4 ஆம் தேதி சிக்கிம் புத்தாண்டான லெப்சா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும், 11 ஆம் தேதி மிஷினரி நாளுக்கும், 12 ஆம் தேதி சுவாமி விவேகனந்தர் பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் / மகரசங்கராந்திக்கும், 14ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினத்திற்கும் சேர்த்து 9 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்து மாநில வங்கிகளுக்கும் பொருந்தாது என்று RBI அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!