தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 152 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!

0
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 152 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 152 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 152 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 152 காலி பணியிடங்கள் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தகுதியும் விருப்பமும் பெற்றவர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகல்வித்துறையில் வேலை

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளியின் பெருமை போன்ற சில திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஊக்கத்தொகை திட்டத்தின் மூலமாக நிதியூதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களில் புதிதாக 152 பேரை நியமிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Senior Fellows பணியிடங்களுக்கு மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு 45 ஆயிரம் வரைக்கும் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தல், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலமாக உதவுதல் போன்ற பணிகளை பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Fellows பணியிடங்களுக்கு மொத்தமாக 114 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு 32 ஆயிரம் வரைக்கும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமெனவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும், கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் பெற்றவர்கள் ஜூலை 2022 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தில் பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலம் நிறைவடையும்போது அரசு சார்பில் அனுபவச் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்கிற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here