தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாதம் ரூ.1500 உதவித்தொகை!

0
தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாதம் ரூ.1500 உதவித்தொகை!
தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாதம் ரூ.1500 உதவித்தொகை!
தமிழ் தெரிந்த 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாதம் ரூ.1500 உதவித்தொகை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி இலக்கியத் திறனை வளர்க்கும் வகையில் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, தேர்வு நாள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திறனறித் தேர்வு:

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ் மொழி வளர்ச்சியின் மீது அதிக ஈடுபாட்டை கொண்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க பல்வேறு முறைகளில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தமிழ் திறனறித் தேர்வு 2022-23 ஆண்டு முதல் நடத்தப்பட உள்ளது. இதில் 50% – 50% என்கிற வகையில் அரசு – தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி இதில் தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

எனவே இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் www.dge.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக அவரவர் பள்ளி மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி இலக்கியத் திறனை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இத்தகைய ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் 10ம் வகுப்பு தரநிலையில் தயார் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான வழிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இத்தேர்வுக்கு வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வானது நடத்தப்பட உள்ளது. வருகிற அக்டோபர் 1 அன்று தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here