Post Officeன் சூப்பர் PPF திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!

0
Post Officeன் சூப்பர் PPF திட்டம் - தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
Post Officeன் சூப்பர் PPF திட்டம் - தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
Post Officeன் சூப்பர் PPF திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!

இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள், மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதிக முதிர்வுத் தொகையை பெறலாம். அந்த வகையில் அதிக பயன் தரும் திட்டமாக ,பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. இந்த திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

PPF திட்டம்:

Post Officeன் சிறுசேமிப்பு திட்டங்களில், முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முக்கிய திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகும். இந்த திட்டம் நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் அஞ்சலகத் திட்டமாகும். இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நகர்வுகளால் பணத்தை இழக்கும் ஆபத்து இல்லாத சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு உள்ள திட்டம் ஆகும்.

இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா 4வது அலை – IIT கான்பூர் எச்சரிக்கை! பொதுமக்களே உஷார்

இந்த திட்டத்தின் மூலம் சிறு பணத்தை முதலீடு செய்து நல்ல முதிர்வுத் தொகையை பெறலாம். இந்த திட்டத்திற்கான கணக்கை நாட்டில் உள்ள அனைத்து குடிமகனும் அருகில் உள்ள தபால் நிலையங்களில் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த PPF கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ரூ 500 முதலீடு செய்து திறக்க முடியும். இந்த கணக்கில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்சம் 1.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த திட்டம் மூலம் 15 வருடங்ள் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க முடியும்.

தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இத்திட்டத்தில் 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 150 ரூபாய் வீதம் மாதத்திற்கு சுமார் ரூ.4500 முதலீடு செய்தால், முதிர்வு காலம் 20 ஆண்டுகளில் முதலீடு ரூ.10.80 லட்சமாக இருக்கும். அதனுடன் கூட்டு வட்டியும் சேர்த்து, முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.20 லட்சத்தை பெறலாம். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80c பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம். மேலும், PPF திட்டத்தில் முதலீடு செய்வது ‘EEE’ வகையின் கீழ் வருவதால், PPF இல் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!