நாட்டின் வேலைவாய்ப்பு ஆகஸ்ட், ஜூலை மாதங்களில் 15 லட்சமாக குறைவு – CMIE அறிக்கை!

0
நாட்டின் வேலைவாய்ப்பு ஆகஸ்ட், ஜூலை மாதங்களில் 15 லட்சமாக குறைவு - CMIE அறிக்கை!
நாட்டின் வேலைவாய்ப்பு ஆகஸ்ட், ஜூலை மாதங்களில் 15 லட்சமாக குறைவு - CMIE அறிக்கை!
நாட்டின் வேலைவாய்ப்பு ஆகஸ்ட், ஜூலை மாதங்களில் 15 லட்சமாக குறைவு – CMIE அறிக்கை!

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாதத்தில் 15 லட்சமாக குறைந்துள்ளதாக தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைப்பாட்டை பராமரித்து வருகிறது. 2021-22 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும், சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) சமீபத்தில் நாட்டின் வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் அறிக்கையை சிஎம்ஐஇ மேலாண்மை இயக்குனர் (எம்டி) மகேஷ் வியாஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த 2,000 அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்!

அதன்படி, தேசிய வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.96 சதவிகிதத்திலிருந்து 8.32 சதவிகிதமாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 20.1 சதவீதம் உயர்ந்துள்ளது, இருப்பினும் வேலைவாய்ப்புகள் இன்னும் மீளவில்லை என்று அறிவித்துள்ளார். அதவாது அறிக்கையின் படி, நகர்ப்புற வேலையின்மை ஜூலை மாதம் 8.3 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவிகிதமாகவும், ஜூன் 2021 இல் 10.07 சதவிகிதமாகவும் உயர்ந்தது. கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை பாதிப்புக்கு முன்பு மார்ச் மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 7.27 சதவிகிதமாக இருந்தது.

செப்.24 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மும்பை மாநகராட்சி அறிவிப்பு!

மார்ச் மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 7.27 சதவிகிதமாக இருந்தது 8 மாநிலங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கமாக உள்ளது. ஹரியானாவில் ஆகஸ்ட் மாதத்தில் 35.7 சதவிகிதமும், ராஜஸ்தான் 26.7 சதவிகிதம், ஜார்க்கண்ட் 16 சதவிகிதம், பீகார் மற்றும் ஜம்மு & காஷ்மீர் தலா 13.6 சதவிகிதமும் இருந்துள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் கடந்த மாதம் வேலையின்மை விகிதம் 11.6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, ஜூலை 2021 உடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 15 லட்சம் குறைவான வேலை வாய்ப்புகள் நாட்டில் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!