அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் ஊழியர்கள் 15 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் ஒரே நாளில் 6,148 பேர் கொரோனாவால் பலி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
15 நாட்களுக்கு பிறகும் சிகிச்சை தொடர்ந்தால் சிறப்பு விடுப்பை தவிர்த்து மற்ற விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். மத்திய அரசின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 20 நாட்களுக்கு சிறப்பு விடுமுறையும், அதற்கும் மேல் மருத்துவமனை சிகிச்சை தொடர்ந்தால் அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்து விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் மத்திய அரசின் ஊழியர்கள் தொடர்புடன் இருந்தால் அவர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஆன் டூட்டி அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதாக கணக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Wnt spl r esevatipn for covid affected neet students inmbbs seats in tamilnadu.