ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் – பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!

0
ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் - பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!
ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் - பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!
ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் – பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!

இந்தியாவின் பிரதமராக பதவியில் இருந்து வரும் நரேந்திர மோடி உயர்தர மெர்சிடிஸ் மேபேக் S650 ரக சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள், அதன் விலை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சொகுசு கார்

பொதுவாக அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு வாகனங்களை பயன்படுத்துவது வழக்கமானதாகும். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எந்த அளவுக்கு சொகுசாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பானதாக, விலை உயர்ந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டுக்காக விலையுயர்ந்த புதிய மெர்சிடிஸ் மேபேக் S650 ரக கார் வாங்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே நரேந்திர மோடி பயன்படுத்தும் உடைகள், கூலிங் கிளாஸ் கண்ணாடிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது.

SA vs IND ஒருநாள் தொடர் – ரோஹித் ஷர்மாவிற்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமனம்? BCCI திட்டம்!

இப்போது இந்த பட்டியலில் பதிதாக மெர்சிடிஸ் மேபேக் S650 ரக காரும் சமீபத்தில் இணைந்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி பயன்படுத்தி வரும் ரேஞ்ச் ரோவர், லேண்ட் குரூசர் மற்றும் BMW 7 சீரிஸ் கார்களுடன் இந்த புதிய விலையுயர்ந்த காரும் இடம்பிடித்துள்ளது. முதன் முதலாக இந்த மெர்சிடிஸ் மேபேக் S650 ரக காரில், பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வரவேற்க சென்றிருக்கிறார். தொடர்ந்து இந்த கார் பயணம் அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் மேபேக் S650 காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. தவர இந்த காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ V12 எஞ்சின் இருக்கிறதாம். அதனால் இந்த வகை கார்கள் 516 Php ஆற்றலையும் 900 nm டார்க் திறனையும் பெற்றுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்க்கையில், இதன் ஜன்னல்கள் ஸ்டீல் கோர் புல்லட் தாக்குதலை தடுக்க வல்லது. இது ERV போன்ற வெடி குண்டு தாக்குதலிலும் இருந்து பாதுகாக்கிறது.

TNUSRB போட்டி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

குறிப்பாக 2 மீட்டர் தொலைவில் 15 கிலோ TNT வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றாலும் இது தாக்குப்பிடிக்கும். இதில் பிரத்யேக ஆக்சிஜன் சப்ளையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் எரிபொருள் டேங்க் விஷேச உலோக பூச்சு ஓட்டைகளை தானாகவே சரி செய்து கொள்ளும். இதன் டயர்கள் ஆபத்தில் இருக்கும் போதும் தொடர்ந்து செயல்படும். இதன் விலையை பொருத்தளவு ரூ.15 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த வகையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனங்களை SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு தான் தேர்ந்தெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!