டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு – 147 காலிப்பணியிடங்கள்! ஏப்ரல் 25 கடைசி நாள்!

0
டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு - 147 காலிப்பணியிடங்கள்! ஏப்ரல் 25 கடைசி நாள்!
டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு - 147 காலிப்பணியிடங்கள்! ஏப்ரல் 25 கடைசி நாள்!
டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு – 147 காலிப்பணியிடங்கள்! ஏப்ரல் 25 கடைசி நாள்!

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர் பதவிக்கு, விண்ணப்பிக்க தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் RRC அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.rrchubli.in மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 25, 2022 ஆகும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

நாடு முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய, கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்து உள்ளதால் அமலில் இருந்த அனைத்து தடுப்பு விதிமுறைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC), தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள சரக்கு ரயில் மேலாளர் பதவி நிரப்ப பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிறுவனத்தில் மொத்தம் 147 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி?

இந்த ஆட்சேர்ப்பு தென்மேற்கு ரயில்வே மற்றும் ரயில் சக்கர தொழிற்சாலை ஊழியர்களுக்கு மட்டுமே. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பதவிகளுக்கான வயது வரம்பு குறித்து பேசுகையில், பொதுப் பிரிவினர் 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு, இந்த அதிகபட்சம் 47 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

1.முதலில் RRC ஹூப்ளியின் அதிகாரப்பூர்வஇணையதளமான www.rrchubli.in க்குச் செல்ல வேண்டும்.

2.முகப்புப் பக்கத்தில் உள்ள, “Click Here To Submit Online Application” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

3.இப்போது புதிய பதிவு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.பின்பு விண்ணப்ப படிவத்தை பிழை இல்லாமல் நிரப்பவும்.மேலும் சான்றிதழை பதிவேற்றி கையொப்பமிடுங்கள்.

4.அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும். விண்ணப்பதாரர், இங்கே கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெற வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!