மாநிலத்தில் அதிரடியாக 144 தடை உத்தரவு – அச்சத்தில் பொதுமக்கள்!

0
மாநிலத்தில் அதிரடியாக 144 தடை உத்தரவு - அச்சத்தில் பொதுமக்கள்!
மாநிலத்தில் அதிரடியாக 144 தடை உத்தரவு - அச்சத்தில் பொதுமக்கள்!
மாநிலத்தில் அதிரடியாக 144 தடை உத்தரவு – அச்சத்தில் பொதுமக்கள்!

மாநிலத்தில் பாஜக நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. இதனால் புறநகர்ப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் நெட்டாறு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று கர்நாடக மாநிலம் மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள சூரத்கலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ANI செய்திகளின் படி, பாதிக்கப்பட்ட முகமது ஃபாசில், இளைஞர்கள் குழுவால் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிஆர்பிசி 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெல்லாரயில் வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டரின் வீட்டிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை சென்றிருந்த அதே நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சூரத்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரத்கல், முல்கி, பாஜ்பே மற்றும் பனம்பூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய உத்தரவு – சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு

மேலும் சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் ஃபாசில், தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, தென் மாநிலத்தில் பரவலான சீற்றத்தைத் தூண்டிய தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணித் தலைவரின் கொலை தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை கர்நாடக காவல்துறை கைது செய்தது. மேலும் ஃபாசில் கொலை வழக்கு குறித்தும் போலீஸ் விசாரணை நடந்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here