இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சங்கொல்லி ராயண்ணா சிலைகள் அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக இன்று (டிச.20) முதல் டிச.22 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த டிச.18ம் தேதியன்று சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சங்கொல்லி ராயண்ணா சிலைகள் மீது சிலர் கருப்பு மை ஊற்றியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக சிவசேனா மற்றும் மகாராஷ்டிர ஏகிகரன் சமிதி கட்சியின் ஆதரவாளர்கள் பெலகாவி நகரில் ஒன்று கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இலவச ரெயின்கோட், பூட்ஸ்!

தொடர்ந்து மாநிலத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெலகாவியில், கர்நாடக அரசு மற்றும் காவல்துறையை சேர்ந்த சுமார் 26 அரசு வாகனங்களை மர்மநபர்கள் அடித்து, நொறுக்கி பயங்கரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகாவின் சில பகுதிகளில் மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று (டிசம்பர் 20) காலை 6 மணி முதல் வருகின்ற 22 ஆம் தேதி காலை 6 மணி வரை பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இது குறித்து கர்நாடகா காவல்துறை ஆணையர் டாக்டர் கே.தியாகராஜன் கூறுகையில் ‘கர்நாடகா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் பதட்டமான சூல்நிலையை கருத்தில் கொண்டு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் கர்நாடகாவை சேர்ந்த சிவசேனா தலைவர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிலை அவமதிப்பு தொடர்பாக குற்றச்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here