மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநிலத்தில் பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியில் நாளை உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுராவின் அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விதியை மீறி 6 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இவர்களுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி நிர்வாகம் ஆடை விவகாரத்தில் தலையிடுவதாக உயர் நிதி மன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடுத்தனர்.

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!

இந்த நிலையில் மிகுந்த கலவரங்கள் ஏற்பட்டதால் மாநிலத்தில் சில பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது விடுமுறை அளித்துள்ள பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டும். மேலும் வழக்கை பிப்ரவரி 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம்சார்ந்த ஆடைகளை மாணவ மற்றும் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அணிந்து வரக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – கைநிறைய சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில் நாளை முதலாவதாக உயர்நிலை பள்ளிகள் 10ம் வகுப்பு வரை திறக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஹிஜாப் பிரச்சனை தொடங்கிய உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை காலை 6 மணி முதல் பிப்ரவரி 19ம் தேதி அன்று மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையின் முடிவில் பெறப்படும் தீர்வை பொறுத்து பி.யூ. கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here