இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் கூடும் இடங்களை தவிர்ப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரைக்கும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு

இந்தியாவில் தற்போது பருவமழை காலம் என்பதால் காலரா நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டது. அதிலும் குறிப்பாக புதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகிறது. அதாவது காரைக்காலில் சாக்கடை நீர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டில் குறுக்கே செல்லும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அதன் மூலமாக சாக்கடை நீர் தண்ணீரில் கலந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைக்கும் மாவட்டம் முழுக்க 700 பேருக்கு காலரா மற்றும் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

இதனால் வீட்டில் பயன்படுத்தப்படும் குடிநீரை சுகாதாரமாக பயன்படுத்தும் படி மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காரைக்காலின் அனைத்து வீட்டு பகுதிகளிலும் உள்ள குடிநீர் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் என தண்ணீர் உபயோகப்படுத்தப்படும் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலரும் கடுமையான வயிற்றுப்போக்கு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலருக்கு காலரா அறிகுறிகளும் தென்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் காரைக்கால் பகுதி முழுக்கவே ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் வீட்டில் குடிநீரை சுட வைத்து குடிக்கும்படி அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது மற்றும் பொது இடங்கள் மற்றும் உணவகங்களில் நீர் அருந்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலரா நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்த அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் காலரா அறிகுறிகள் பலருக்கும் கண்டறியப்பட்டு வருவதால் மக்கள் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவு இன்று மாலை முதல் அமலில் இருக்கும் எனவும், மறுஉத்தரவு அறிவிக்கப்படும் வரைக்கும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here