அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை - அரசு அதிரடி அறிவிப்பு!
அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை - அரசு அதிரடி அறிவிப்பு!
அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது நாட்டில் அதிகமாக பண்டிகை, திருவிழாக்கள் மற்றும் யாத்திரை உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் மத்திய அரசு மாநில அரசுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது, பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 1 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கூட்டமாக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவு, மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை சம்பவத்தினால் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் கலவரம், வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here