பள்ளி, கல்லூரிகளுக்கு 144 தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் 2 வாரம் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

0
பள்ளி, கல்லூரிகளுக்கு 144 தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் 2 வாரம் நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
பள்ளி, கல்லூரிகளுக்கு 144 தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் 2 வாரம் நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
பள்ளி, கல்லூரிகளுக்கு 144 தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் 2 வாரம் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடகா மாநிலத்தில் எழுந்த ஹிஜாப் பிரச்சனைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு 144 தடை மற்றும் பிற கட்டுப்பாடுகள் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அதிரடி உத்தரவு:

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் பெண்கள் அரசு கல்லூரியில் வகுப்பறையில் ஹிஜாப் அணிய கூடாது கடந்த வாரங்களில் பிரச்சனை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. இதனால் முன்னதாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு மாநில உய்ரநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கான தீர்ப்பு வரும் வரை மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

அரசின் அனுமதி கிடைத்த பிறகு கர்நாடக பியூசி மற்றும் டிகிரி கல்லூரிகளில் வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். நகரத்தின் பகுதிகளில் அரசு 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். பெங்களூரு பள்ளிகள், கல்லூரிகள் இந்த புதிய உத்தரவுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரம் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் பெங்களூரில் பல்வேறு குழுக்களால் போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!

இன்னும் இரண்டு வாரங்களுக்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும், பெங்களூரு நகரத்தில் உள்ள பள்ளிகள், பியு கல்லூரிகள், டிகிரி கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களைச் சுற்றி எந்தவிதமான கூட்டம், போராட்டம் அல்லது எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனுடன், பெங்களூரு பள்ளிகள், கல்லூரிகளுக்கு இந்தத் தடை உத்தரவுகள் மார்ச் 8, 2022 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, PU கல்லூரிகள், டிகிரி கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பொருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதுவரை அனைத்து கல்வி நிறுவனங்களும் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!