தமிழகத்தில் நாளை முதல் இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை முதல் இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் இம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, நாளை (மே 12) மாலை முதல், 15 ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு:

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வளாகத்திற்குள் வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதிகளில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல், அமைதியாக திருவிழா நடைபெறும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை கடைபிடிக்கும் வகையிலும், நாளை (மே 12) மாலை 6 மணி முதல் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?

இந்த 144 தடை உத்தரவால், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் , தூத்துக்குடியில் இருந்தும் , பிற மாவட்டங்களில் இருந்தும், கலந்து கொள்ளும் மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு வருவதற்கும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளவர்களை அழைத்து வருவதற்கும் தடை போடப்பட்டு உள்ளது. இந்த 144 உத்தரவிலிருந்து, பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்கு வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த திருவிழாவில் அன்னதானம் வழங்கவும், ஊர்வலம் செல்லவும், கூட்டங்கள் போடவும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன்னதாகவே அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பொருந்தாது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 63 அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களை மூட வேண்டும்.

Exams Daily Mobile App Download

அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!