இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகள் தரம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகள் தரம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகள் தரம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகள் தரம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசு:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகளில் அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தளர்த்தப்பட்டு மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா கால இடைவெளியில் மாணவர்களிடம் குறைந்திருந்த கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக பல புதிய கல்வி கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு அட்வான்ஸ் சிஸ்டம் மூலமாக பாடங்கள் நடத்த ஆசிரியர்களுக்கு என தனி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதே போல் தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் புதிய கல்வி செயல்முறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிகரித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவர்களின் தனித்திறனை அதிகரிக்க பல்வேறு போட்டிகள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.

EPFO ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஓய்வூதிய வயது வரம்பு அதிகரிப்பு!

இதற்காக ஒன்றிய அரசு ரூ.27,360 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மாநில அரசுகளுக்கு ரூ. 18,168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன. கடந்த செப்.5ம் தேதி பிரதமர் புதிய திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்தியாவில் நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும் போது பி.எம். ஸ்ரீ (PM Schools for Rising India) தேசிய கல்வி கொள்கை ஆய்வகங்களாக செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!