தோனியின் முதல் ‘விசில் போடு’ வீடியோவுடன் ட்ரெண்ட் ஆகும் #14YearsOfThala | கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள்!

0
தோனியின் முதல் 'விசில் போடு' வீடியோவுடன் ட்ரெண்ட் ஆகும் #14YearsOfThala | கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள்!
தோனியின் முதல் 'விசில் போடு' வீடியோவுடன் ட்ரெண்ட் ஆகும் #14YearsOfThala | கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள்!
தோனியின் முதல் ‘விசில் போடு’ வீடியோவுடன் ட்ரெண்ட் ஆகும் #14YearsOfThala | கொண்டாட்டத்தில் CSK ரசிகர்கள்!

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பாக பிப்ரவரி 20ம் தேதியன்று நடைபெற்ற ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு தோனி சொந்தமான நிகழ்வினை ரசிகர்கள் இன்று (பிப்.20) வரையும் கொண்டாடி வரும் நிலையில், இது தொடர்பான கேஷ்டேக்குகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டன் தோனி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். அந்த வகையில் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த IPL தொடரில் ஒவ்வொரு ஆண்டும் CSK அணிக்காக தனது பங்களிப்பை கொடுத்து வரும் தோனி இதுவரை 4 டிராபிகளை வென்றிருக்கிறார். இந்த முறையும் 15வது சீசனாக நடத்தப்பட இருக்கும் IPL போட்டிகளில் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பொறுப்பை வகித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பொதுவாக IPL கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும் இடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அதாவது, தமிழகத்தை சேர்ந்த ஸ்பான்சர்களின் கீழ் IPL போட்டிகளில் களம் கண்டு வரும் CSK அணிக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் தங்களது அன்பையும், ஆதரவையும் கொடுக்கத் தவறுவதில்லை. இதில் ஒரு படி மேலே போய் CSK அணியில் உள்ள சில முக்கியமான வீரர்களுக்கு ரசிகர்கள் செல்ல பெயரிட்டு அழைத்து வருகின்றனர். அந்த வகையில் CSK அணியின் கேப்டன் தோனியை ரசிகர்கள் செல்லமாக தல என்றும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றும் கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஒவ்வொரு IPL சீசன் துவங்கும் போதும் CSK அணியினர் பயிற்சிக்காக சென்னைக்கு வரும் போது, குறிப்பாக தோனி வரும் போது ரசிகர்கள் பெரிய அளவுக்கு ஆரவாரம் செய்வது உண்டு. மேலும் தோனியின் சென்னை வருகை சமூக வலைதளங்களில் அன்றைய நாளுக்கான முக்கிய பேச்சாக அமைந்திருக்கும். அந்த அளவுக்கு சென்னைக்கும், CSK அணிக்கும் இடையே அளவிட முடியாத ஒரு பந்தம் உண்டு. இது தவிர CSK அணியின் தீவிர ரசிகர்கள் சிலர் IPL போட்டியை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல், அந்த அணி தோற்கும் போதும், வெற்றி பெறும் போதும் அதனை எமோஷனாக எடுத்துக்கொள்வதும் உண்டு.

இப்படி தமிழ் ரசிகர்களுக்கும், தோனிக்கும் இடையே இருக்கும் பல்வேறு விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இருக்க தற்போது IPL போட்டி துவங்கி 14 சீசன்களை கடந்திருக்கும் நிலையில், CSK ரசிகர்கள் தோனியின் பெருமையை இன்று வரையும் கொண்டாடி வருகின்றனர். அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் (பிப்.20) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தோனியுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை செய்திருந்தது. கடந்த 2008ம் ஆண்டில், தோனி 1.5 மில்லியன் டாலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமானார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை! புதுவகை கொரோனா எதிரொலி!

அன்று முதல் இன்று வரையும் சென்னை அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்து வரும் தோனியை கொண்டாடும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”7+ 7 வருடங்கள் டென்கமிங்! #THA7A #WhistlePodu” என்ற கேஷ்டேக்கை பதிவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து CSK அணியின், விசில் போடு பாடல் வெளியாகி 14 ஆண்டுகள் கடந்திருக்கும் ”#14YearsOfThala #WhistlePodu @msdhoni” ஒரு பதிவையும் ஷேர் செய்திருக்கிறது அணி நிர்வாகம். இதனை கண்ட ரசிகர்கள் தல தோனியை கொண்டாடும் விதமாக #WhistlePodu கேஷ்டேக்கை வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here