தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!

0
தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!
தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!
தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!

தமிழகத்தில் வேலையில்லா நிலைய உருவாக்க பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 10ம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற ஓட்டுநர், மருத்துவ முதலுதவி செய்பவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி, ராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைப்பது எப்படி?

இந்த முகமானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி அரசு நீச்சல் குளம் எதிரில் உள்ள வின்சென்ட் கல்யாண மண்டபத்தில் பிப்ரவரி 10ம் தேதி காலை 9.30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என இரண்டு பணியிடத்துக்கும் ஒரே நபரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது லேப் டெக்னீசியன் அல்லது டி.பார்ம் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!

இப்பணிக்கு தகுதியான நபர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்துடன் இப்பணிக்கு 22 வயது முதல் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியமாக 14966 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அத்துடன் உயரம் 162.5 செமீக்கு குறையாமல் இருக்க வேண்டும். அத்துடன் பொது வாகன உரிமம் (பேட்ஜ்) மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடன் கொண்டு வர வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!