மே மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மே மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஏப்ரல் மாதம் முடிவடைந்து, மே மாதம் தொடங்க உள்ள நிலையில், வரும் மே 2022க்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மேலும் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது சிறந்தது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

விடுமுறை பட்டியல்:

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் குறிப்பிட்ட நாட்கள் மூடப்படும். இந்நிலையில் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வரும் மே மாதத்திற்கான முழு விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அனைவருக்குமான மிக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இடமாக உள்ளது. மேலும் சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வங்கிகளை தேடித்தான் நாம் செல்கிறோம்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!

எனவே, வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வதன் மூலம் தேவையில்லாத அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கி பணிகளை எளிதாக திட்டமிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. அதுபோல இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல்படி, மே மாதத்தில், மொத்தம் உள்ள 31 பல்வேறு மண்டலங்களில் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வங்கி விடுமுறைகள் வேறுபடும். அதேபோல் போது விடுமுறையும் இருக்கக்கூடும்

  • மே 1: தொழிலாளர் தினம் / மகாராஷ்டிரா தினம் (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • மே 2: மகரிஷி பரசுராமர் ஜெயந்தி – பல மாநிலங்களில் விடுமுறை
  • மே 3: ஈத்-உல்-பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)
  • மே 4: ஈத்-உல்-பித்ர்
  • மே 9: குரு ரவீந்திரநாத் ஜெயந்தி – மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா
  • மே 14: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
  • மே 16: புத்த பூர்ணிமா
  • மே 24: காசி நஸ்ருல் இஸ்மாலின் பிறந்தநாள் – சிக்கிம்
  • மே 28: 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை

மே 2022 இல் வார இறுதி(ஞாயிறு) வங்கி விடுமுறை நாட்கள்: மே 1, மே 8, மே 15, மே 22 ,மே 29 ஆகிய நாட்கள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here