தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 14 நாட்கள் தற்செயல் விடுப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 14 நாட்கள் தற்செயல் விடுப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 14 நாட்கள் தற்செயல் விடுப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 14 நாட்கள் தற்செயல் விடுப்பு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் தொற்று பாதிப்பிற்குள்ளாகி வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை சிறப்பு தற்செயல் விடுப்பின் கீழ் அனுமதிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு தற்செயல் விடுப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதல்வர் அறிவிப்பின் படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இந்த வகையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

SSC CGL ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – தேர்வர்கள் கவனத்திற்கு

இந்த வகையில் முதல் அலையின் போது அரசு ஊழியர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின் அதிகபட்சமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலமாக அரசு அறிவித்திருந்தது. இந்த தனிமைப்படுத்துதல் காலத்திற்க்கான சான்றிதழ்கள் மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரால் வழங்கபடும். இந்த வகையில் வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி கொரோனா பாதித்த நபர் & அவருடைய குடும்ப உறுப்பினருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் வரை தற்செயல் விடுப்பு கீழ் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் அதற்கு தீர்க்கமான காலவரையறை என்பது ஏதுமில்லை.

ஜனவரி 22 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் – அமைச்சர் உத்தரவு!

இதன் அடிப்படையில் தொற்று பாதித்த நபர் அல்லது குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி மூலமாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் சிகிச்சை அறிக்கையின் நகல் அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!