ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வங்கி நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வங்கி விடுமுறை:

தற்போது ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 2022 க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வழக்கமாகவே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் முதல் மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதம் வார விடுமுறைகள் உட்பட பல்வேறு விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

மேலும் வார இறுதி நாட்களைத் தவிர, நாட்டின் பல்வேறு நகரங்களில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts (வங்கி கணக்குகளை மூடுதல்) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கிளைகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, தேசிய விடுமுறை நாட்களில் தேசிய அளவில் வங்கி விடுமுறைகள் உள்ளன, இதனால் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.

PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு – eKYC காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு!

  • ஜூலை 1: காங் (ரத யாத்திரை)-புவனேஷ்வர்
  • ஜூலை 7: கர்ச்சி பூஜை-அகர்தலா
  • ஜூலை 9: பக்ரீத்-கொச்சி, திருவனந்தபுரம்
  • ஜூலை 11: ஈத்-உல்-அஜா-ஸ்ரீநகர், ஜம்மு
  • ஜூலை 13: பானு ஜெயந்தி-காங்டாக்
  • ஜூலை 14: பெஹ் டீன்க்லாம்-ஷில்லாங்
  • ஜூலை 16: ஹரேலா-டேராடூன்
  • ஜூலை 26: கேர் புஞ்சா-அகர்தலா

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here