தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ரூ.1,358 கோடி இழப்பு!

0
தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் - ரூ.1,358 கோடி இழப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் - ரூ.1,358 கோடி இழப்பு!
தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ரூ.1,358 கோடி இழப்பு!

தமிழகத்தில் அரசு நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது. இதனால் அரசுக்கு 1,358 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வருவாய் இழப்பு:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் அவர் அளித்ததில் எந்த வாக்குறுதிகளை முதலில் கையொப்பமிட்டு அரசாணையாக வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் 5 வாக்குறுதிகளை திட்டமாக மாற்றி செயல்படுத்தினார். அதில் அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. மற்ற மாநில பெண்களும் தமிழகத்தைப் போல் எங்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

Vi வழங்கும் வருடம் முழுவதுக்குமான இலவச டேட்டா திட்டம் – முழு விவரங்கள்!

இந்த பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் ஏராளமான பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். முன்பெல்லாம் பேருந்துக்காக நின்றால் காலதாமதம் ஆகும் என்று பெரும்பாலும் ஆட்டோக்களில் செல்வர்கள். ஆனால் இப்போது காத்திருந்து அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இலவசமாக பயணம் செய்யும் மகளிரின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் முதல்வரின் இந்த திட்டத்தால் ஏராளமான பணிக்கு செல்லும் பெண்கள் பயனடைந்துள்ளனர் எனவும், அரசின் இந்த திட்டத்தால் மாதந்தோறும் செய்யப்படும் போக்குவரத்திற்கான செலவு மிச்சப்படுகிறது என பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு 1,358 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசு 1,200 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளது. மேலும் மீதி தொகையை விரைவில் அரசு வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!