மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.
வங்கிகளுக்கு விடுமுறை:
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!
அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை தினம் மாறுபடுகிறது. மேலும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, குடியரசு தின விடுமுறை போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும் மற்ற விடுமுறை மாநிலத்தை பொறுத்து மாறுபடும். இந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வர உள்ளது. இந்த மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள்:
- 01.03.2022 – மகா சிவராத்திரி
- 02.03.2022 – திவாஸ்
- 03.03.2022 – லோசர் (காங்டாக்கில் வங்கி மூடல்)
- 04.03.2022 – சக்பார் குட்
- 06.03.2022 – ஞாயிறு விடுமுறை
- 12.03.2022 – இரண்டாவது சனிக்கிழமை
- 13.03.2022 – ஞாயிற்றுக்கிழமை
- 17.03.2022 – ஹோலிகா டஹான்
- 18.03.2022 – ஹோலி பண்டிகை
- 19.03.2022 – ஹோலி அல்லது யசோங் (புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னாவில்)
- 20.03.2022 – ஞாயிற்றுக்கிழமை
- 26.03.2022 – நான்காம் சனிக்கிழமை
- 27.03.2022 – ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)