செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!

0
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - RBI அறிவிப்பு!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - RBI அறிவிப்பு!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!

செப்டம்பர் மாதத்தில் வாரஇறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தின விடுமுறையை சேர்த்து மொத்தமாக 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், இந்த வங்கிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பண்டிகை தின விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துவதில்லை. மேலும், எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதால் கேரளா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு தான் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் 1031 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – வெளியான அறிக்கை!

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்களை பார்க்கலாம்,

  • செப்டம்பர் 1 – விநாயக சதுர்த்தி காரணமாக கோவாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்க்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
  • செப்டம்பர் 7 மற்றும் 8 – ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி காரணமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 21- ஸ்ரீ நாராயண குரு சமாதி திவாஸ் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை
  • செப்டம்பர் 26 – நவராத்திரி ஸ்தாபனம் காரணமாக மணிப்பூர் மற்றும் ராஜஸ்தானில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!