செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு பட்டியல் இதோ!
செப்டம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்கள் எந்தெந்த மாநிலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கான முழு பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், இந்த வங்கிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. எப்போதும் வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 5G சேவை தொடங்குவது எப்போது? மத்திய மந்திரி விளக்கம்!

இந்த வார இறுதி விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்த பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அதாவது, எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் போது தம்முடைய மாநிலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து வங்கிகளுக்கு செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்களை பார்க்கலாம்,

செப்டம்பர் 1: விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 4: ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 6: கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 7: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 8: திருவோணத்தை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 9: இந்திரஜாத்ரா காரணமாக காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 10: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 11: ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 18: ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 24: நான்காவது சனிக்கிழமை விடுமுறை

செப்டம்பர் 25: ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 26: லைனிங்தௌ சனாமாஹியின் நவராத்திரி ஸ்தாப்னாகாரணமாக இம்பால் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!