தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் – இன்று முதல் விண்ணப்ப பதிவு!

1
தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் - இன்று முதல் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் - இன்று முதல் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுகள் – இன்று முதல் விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சிறப்பு துணை தேர்வு நடைபெறும் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு துணை தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் உட்பட பிற கல்வி நிறுவனங்கள் திறப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

தற்போது அதற்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற தனித்தேர்வர்கள் மற்றும் வெளியிடப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களும் 23.07.2021 (இன்று) முதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் கட்டாயம் அனைத்து பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மதிப்பெண் குறைவாக உள்ள குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியாது. தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. அடுத்து வேற வாய்ப்புகள் வழங்கப்படாது. மேலும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்லைன் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான சிறப்பு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள், தனித்தேர்வர்களுக்கான தகுதிகள் மற்றும் அறிவுரைகள் ஆகியவை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்விவரங்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் 2021 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க சேவை மையங்களுக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here