PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு 12வது தவணை பண அறிவிப்பு – முக்கிய தகவல்!

0
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு 12வது தவணை பண அறிவிப்பு - முக்கிய தகவல்!
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு 12வது தவணை பண அறிவிப்பு - முக்கிய தகவல்!
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு 12வது தவணை பண அறிவிப்பு – முக்கிய தகவல்!

பிரதமர் கிசான் யோஜனா மூலம் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்து வருகிறது. இதுவரைக்கும் விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் 11 தவணைகளில் நிதியுதவி பெற்றுள்ளனர். இந்நிலையில் 12 வது தவணைக்காக விவசாயிகள் காத்துக் கொண்டு உள்ளனர்.

PM Kisan:

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பணம் ஒரு வருடத்தில் 4 மாத இடைவெளியில் மூன்று சமமான தவணைகளில் விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் 12 வது தவணை தொகைக்காக காத்திருக்கிறார்கள். ஊடக அறிக்கையின்படி, பிஎம் கிசானின் 12 வது தவணை அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்படலாம்.

TN -TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

மேலும் பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் இகேஒய்சியை முடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் eKYC க்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 என அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக, பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் eKYC கான காலகெடு முடிவடைந்துள்ளது. மேலும் eKYC ஐ முடிக்காதவர்கள், திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய்க்கான பலனைப் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 12 வது தவணை தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட் என்னவென்றால், ஜூலை 31 தேதி வரை eKYC செய்யாத விவசாயிகளின் தவணை தொகை சிக்கியிருக்கலாம். இது தவிர, பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்ளும் மக்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர PM Kisan Yojana தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், ஹெல்ப்லைன் எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது அஞ்சல் ஐடியில் அனுப்புவதன் மூலமோ நீங்கள் அதைத் தீர்க்கலாம். இதற்கு, நீங்கள் PM கிசானின் ஹெல்ப்லைன் எண்- 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) அல்லது 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, உங்கள் புகாரை மின்னஞ்சல் ஐடியிலும் ( [email protected] ) அனுப்பலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!