தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் – ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் - ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் - ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் – ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மதிப்பெண்களை பள்ளி அளவில் சரிபார்த்து தேர்வு துறைக்கு அனுப்ப ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மதிப்பெண்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 வகை மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் அறிவிப்பு? அரசு திட்டம்!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அதன்படி, 10ம் வகுப்பில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரியில் இருந்து, 50 சதவீத மதிப்பெண்கள், பிளஸ் 2வில் சேர்க்கப்படுகின்றன.பிளஸ் 1 எழுத்து தேர்வில் இருந்து, 20 சதவீத மதிப்பெண்களும், அகமதிப்பீடாக, 30 மதிப்பெண்களும், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இடம்பெற உள்ளன.

இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போது ளஸ் 1 சேர்க்கையின் போது மாணவர்கள் வழங்கிய, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகளின் செய்முறை தேர்வில் வழங்கிய மதிப்பெண்கள் ஆகியவற்றை சரிபார்த்து, பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பட்டியலில் உள்ள மதிப்பெண்ணும் அரசு தேர்வு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்ணும் சரியாக உள்ளதா என சரிபார்த்து அதன் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பட்டியல் தயார் செய்து தேர்வு துறை இணையதளத்தில் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களும் விரைவாக இந்த பணியை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here